புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 400 போலீஸாரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சுனில்குமார் கௌதம் உத்தரவிட்டார். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் டிஜிபி சுனில்குமார் கெளதம் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பண்டிகைக்காலங்களில் போலீசார் கடைகளில் மாமூல் வாங்குவது குறித்து பல புகார்கள் வந்தது. ஏற்கனவே போலீசார் இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்திருந்தார். இதனைத்தடுக்கும் வகையில் புதுச்சேரி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி சென்று 23 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் புதிதாக வாங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை பார்வையிட்டுவிட்டு வீட்டுக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாகவும், அப்போது காரில் வந்த இரண்டு இளைஞர்கள் தன்னை காரில் கடத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் காரில் வைத்தே […]
டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.டில்லியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் ராஜஸ்தானின் பிகாநிர் பகுதியில் , கடந்த செப்., 25 அன்று சாலையில் நின்று கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த சிலர் அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர், மேலும் சிலரை அழைத்து காரில் பலாத்காரம் செய்துவிட்டு கடத்திய இடத்தில் இறக்கிவிட்டு சென்றனர். இந்த பெண் நேற்று(செப்.,28) போலீசில் தன்னை 23 […]
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவை விசாரிக்கும் என அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதாவின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் யார் எல்லாம் விசாரிக்கப்படுவார்கள். […]
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியாதவர், தன்னை விமர்சனம் செய்வதாகவும், கறுப்பு பணம் குறித்து நாட்டு மக்களை தவறாக வழிநடத்தவதாக பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.ஜெட்லியின் நண்பர்:இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால், ஜெட்லி தற்போது நிதியமைச்சராக இருந்திருக்க முடியாது. முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எனது நண்பர் இல்லை. ஆனால், அவர் ஜெட்லியின் நண்பர். ஜெட்லி எனது பின்னணி பற்றி மறந்துவிட்டார். அரசியலில் நுழைவதற்கு முன் பல […]
டெல்லி : இந்தியாவில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 2016-ல் 1000-க்கு 34 என்ற அளவில் இந்தியாவில் சிசுக்கள் மரணம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பை: எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் பீதியடைந்த மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துக்கொண்டு ஓடினர். மக்கள் ஓட்டத்தால் ரயில் நிலைய மேம்பாலத்தில் பெரும் கூட்ட […]
நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு வைகோ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையின், இஸ்ரோ ஆய்வு மையத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாறை ஒன்றில் பிளவு ஏற்பட்டது என்று தனியார் தொலைக்காட்சியின் வள்ளியூர் செய்தியாளர் ராஜு கிருஷ்ணா மற்றும் நெல்லை செய்தியாளர் நாகராஜன் ,தினகரன் பணகுடி செய்தியாளர் ஜெகன் ஆகியோர் செய்தி அனுப்ப அது […]
இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள பத்ம பிரபா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்ற நர்சிங் மாணவி தயாட்சினி மருத்துவமனை டாக்டர் காந்திராஜின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்டார்….. மருத்துவமனை சார்பில் காவல்துறை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து வயிற்றுவலி என்று பொய் FIR பதிந்துள்ளனர் என மாணவர் சங்கத்தினரும் பெற்றோரும் கூறுகின்றன்ர்…. மாணவி தயாட்சினியைப் போல இதுவரை 8 மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர் காந்திராஜை […]
இலங்கை மக்களுக்கு ஆதரவாக ஐ.நா. சபையில் பேசிய மதிமுக தலைவர் வைகோவை தாக்க முற்பட்ட இலங்கை சிங்களவர்களை கண்டித்து இன்று தமிழ் புலிகள் கட்சி மற்றும் மே 17 இயக்கம் சார்பில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொது அந்தந்த இயக்கங்களை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். சென்னை, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கைது செய்ப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியுடன் தமிழ் புலிகளின் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் தங்கமீன்கள் திரைப்பட இயக்குநர் […]
இன்று காலை முதலே ஏராளமானோர் கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தும், அலங்காரம் செய்தும் ஆயுத பூஜை கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். வீடுகளிலும், பனைஒலை தோரணங்கள், வாழை மர கன்றுகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுத பூஜை பண்டிகையின் போது வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொரி, அவல், பழங்கள், பூக்கள், வாழை மரக்கன்றுகள் ஆகியவற்றை விற்பனை நேற்று மாலை முதலே களைகட்டி வருகிறது.ஆயுத பூஜையையொட்டி, தமிழகத்தின் பெரும்பாலான கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
கேரளா வந்த ஷார்ஜா அதிபர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காஸிமியிடம் முதல்வர் பிணராயி விஜயன் ஷார்ஜா சிறைகளில் இருக்கும் இந்திய கைதிகளை விடுவிக்க வேண்டுகோள் வைத்ததும் அதை ஏற்று அவர் 149 பேரை விடுதலை செய்வதாக அறிவித்ததும் நாம் அறிந்ததே. இந்த விஷயத்தை தான் செய்ததாக மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் டூ வீட்டரில் எழுதி விட்டு கேரள மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கும் இந்த சுவாரசியங்களெல்லாம் ஒருபுறமிருக்க, முதல்வர் பிணராய் விஜயன் கைதிகளின் விடுதலை விஷயத்தில் அடுத்த […]
ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு, ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்துப் பிடிவாதமாக மறுத்து வருவது கவலைக்கு உரியதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமை கவுன்சில் […]
தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் நேற்று சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வரம்பி மீறி சரசியல் சாசன அமர்வு பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படலாம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ராம்சரணை திருத்த அவர் தாய் முயன்றுள்ளார், ஆனால் பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாயையுமே ராம்சரண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மகன் மேல் வெறுப்படைந்த தாய் அவரை கொல்ல முடிவு செய்து கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து ராம்சரணை தனியாக அழைத்து சென்ற கூலிப்படையினர் […]