ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான். மோதல்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகேயுள்ள பிஎஸ்எப் முகாம் உள்ளது. பலத்த பாதுகாப்புள்ள இங்கு, நுழைந்த பயங்கரவாதிகள், கன ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்த துவங்கினர். இதில் 4 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி […]
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கீழமானங்கரை கிராமத்தில் அமரர் சின்னார் என்ற விவசாயி ஒரு புதிய நெல்ரகத்தை அதே கிராமத்தில் உள்ள புஷ்பம் என்பவர் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இந்த நெல் 110-115 நாட்கள் வயதுடையது. நெல் கத்தரி ஊதா கலரில், சாயாத நெல் வகையைச் சேர்ந்தது. புதிய நெல் ரகம் உருவான வரலாறு: 7 வருடங்களுக்கு முன்னர் புஷ்பம் என்ற விவசாயி முதுகுளத்தூர் பஞ்சாயத்து யூனியனில் எடிடி 36 என்ற நெல் ரக விதையை வாங்கிக் கொணர்ந்து […]
முசாபர்நகர்: விஜயதசமியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் கங்கை நதியில் புனித நீராட சாதுக்கள் மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு புனித நதிகளில் சாதுக்கள் நீராடுவர். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் கங்கை நதி பகுதியில் பல ஆசிரமங்களைச் சேர்ந்த சாதுக்கள் நீராட மறுத்துவிட்டனர். அப்பகுதியில் கங்கை நதியில் தொழிற்சாலை கழிவுகள் கலந்து கருப்பு நிறமாக மாறியிருந்தது. இதனால் சாதுக்கள் கங்கையில் நீராட மறுத்தனர். தற்போது முசாபர்நகர் நிர்வாகம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.
திருச்சி: திருச்சி மேலபுலிவார்டு ரோட்டை சேர்ந்த கவிதா(36).(பெயர் மாற்றம்) எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் உறவினர் தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன் (என்ற) கண்ணனை (45) அணுகியுள்ளார். சில பூஜைகள் செய்தால் தொழில் அபிவிருத்தி அடையும் என நம்பிக்கை தெரிவித்த மாரியப்பன், திருச்சிக்கு வந்து சில பூஜைகள் செய்துள்ளார். அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ‘ஷிப்பிங்’ தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய கவிதா ரூ.5 லட்சத்தை மாரியப்பனிடம் வழங்கினார். தொழில் மேலும் […]
டெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. நம் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 148வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று அவருக்கும் அஞ்சலி செலுத்தினார் மோடி. இது குறித்து அவர் ட்விட்டரில் […]
சேலம் : தமிழக அரசுக்கு எதிராக துண்டு பிசுரங்களை விநியோகித்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தினகரானால் சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் நியைக்கப்பட்டார். கைதான வெங்கடாசலத்திடம் துண்டறிக்கை குறித்து அன்னதானம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசத்தின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீர் மக்கள் ஒன்றிணைவதற்கு அரசியல்சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதையே அவர் இவ்வாறு சூசகமாகத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அந்த அமைப்பின் வருடாந்திர தசரா விழா சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மோகன் பாகவத் […]
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருப்பதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கண்டு பிடித்தனர். ஜம்மு காஷ்மீரில் எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக அந்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அர்னியா செக்டர் வழியே செல்லும் சர்வதேச எல்லையில் […]
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஸ்வைபிங் எந்திரம் மூலம், டெபிட், கிரெடிட் கார்டுகள் பண பரிமாற்றம் செய்வதை வலிந்து திணிப்பதன் மூலம் வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 3,800 கோடி இழப்பு ஏற்படும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே முதலீடு இல்லாமலும், வாராக்கடன்களாலும் தவித்து கொண்டு இருக்கும் வங்கிகளுக்கு கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் திட்டத்தை ஊக்கப்படுத்துவது மேலும் இழப்பில் கொண்டு போய் விடும். கள்ள நோட்டு, ஊழல், கருப்புபணத்தை […]
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசினார். அரசின் மீது களங்கம் கற்பித்து ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்பதற்காக இல்லாத விஷயத்தை தேடி கண்டுபிடித்து குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றனர். அரசை விமர்சிப்பதற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஏதாவது ஒன்றை தேடி எடுத்து, தவறாக விமர்சித்து […]