மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைப்பார் என்கிறது அவர்களது சுவரொட்டி. மதவெறியை தூண்டிவிடும் அந்த அமைப்பின் பேரணியை ஓர் அமைச்சரே துவக்கி வைப்பது காலக் கொடுமை. பதவியை தக்கவைக்க எத்தகைய அக்கிரமத்திற்கும் இவர்கள் துணைபோவார்கள் என்பது உறுதியாகிறது. தமிழகத்தில் மக்கள் ஒற்று மையைப் பேண அரசை நம்பி பயனில்லை. மனிதநேய சக்திகள்தாம் அதை காக்க களம் காண வேண்டும். அதற்குத்தான் நேற்று துவக்கப்பட்டிருக்கிறது தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்கிறார் பேராசிரியர்,எழுத்தாளர் அருணன்.
கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 MLA க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. இதனால் தினகரன் ஆதரவு MLA தகுதி நீக்கம் அரசியல் களத்தில் மேலும் சூடுபிடித்துள்ளது.
கேரள நடிகை பாவனா கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்ய முற்ப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 85 நாட்கள் சிறையில் இருந்த நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இதுவரை 4 முறை ஜாமீனுக்காக மனு செய்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5-வது முறையாக திலீப்புக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இருமுறை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், 2முறை உயர்நீதிமன்றத்திலும் இதற்கு முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை பலாத்காரம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்ேததி […]
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று தூய்மை இந்தியா சேவை இயக்கத்தில் இணைந்து அனுஷ்கா சர்மா போன்ற நடிகர்கள் சேவை செய்ததை அடுத்து அதில் இணைந்த மலையாள நடிகர் மோகன்லால், காந்தி ஜெயந்தி அன்று துடைப்பத்தை பிடித்து பள்ளிக்கூடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அக்டோபர் 2-ந் தேதியில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கினார். இதன்படி, நாட்டையும், வாழும் பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் பிராசரம் செய்யப்பட்டு […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டு வரும் சூழலில், மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்பது குறித்த கையேட்டினை ஆசிரியர்களுக்கு முதல்முறையாக தமிழக அரசு வழங்க உள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல், பாடங்கள் நடத்தும்போது, இந்த கையேட்டின் அடிப்படையில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த கையேட்டில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளின்படி, ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். வரலாறு, கணிதம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் என அனைத்து பாடங்களுக்கும் இந்த கையேடு தரப்படும். இது குறித்து […]
அடுத்த மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண், ரத்த வகை அடங்கிய விவரங்களுடன் ‘ஸ்மார்ட்’ கார்டு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “பள்ளிக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத் திட்டத்தை மாற்றுவது, தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மையை […]
கல்வி உதவித் தொகையை குறைக்காமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்தனர். அவர்களுக்கு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்க மாநில அமைப்பாளர் பரதன் தலைமைத் தாங்கினார். முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் பகுதிக்கு வந்தனர். பின்னர் நுழைவு வாசல் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை […]
ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைத்துள்ளதால் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு அனைத்து விதமான பரிவர்த்தனை மற்றும் ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவற்றுடன் ஆதார் கார்டை இணைக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது வோட்டர் ஐடியுடனும் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணாக போலி அட்டைகள் கண்டு பிடிக்க முடியும் என மத்திய அறிவித்திருந்தது. டில்லியில் நிகழ்ச்சி […]
மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக, முக்கியமான துப்பு, சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்துள்ளதாகவும், கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55) செப்டம்பர் 5-ஆம் தேதி பெங்களூருவில் அவரது வீட்டு வாசலிலேயே, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டு சிசிடிவி-யில் 3 கொலையாளிகளின் படங்கள் பதிவாகி இருந்தன. ஆனால், அவர்கள் ஹெல்மெட்அணிந்திருந்ததால் உடனடியாக அடையாளம் காண […]
புதுடில்லி : நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்ததற்கு பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தான் காரணம் என பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறிக்க்கொண்டிருக்கிற போது, தேசிய அரசியலில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.இந்த சலசலப்பு அடங்குவதற்குள் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் சோரியும் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த […]
புதுடில்லி : இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம், பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஜூன் 30-ந் தேதிவரையும், பிறகு செப்டம்பர் 30-ந் தேதிவரையும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், […]
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பூஞ்ச் மாவட்டம் திக்வாரின் நகர்கோட் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இது போன்று தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வழக்கமாகிவிட்டது, ஆனால் அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34வது அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம் ஹிசார்ல் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு மாநிலங்கலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் மாநாட்டினை வாழ்த்தியும் மற்றும் இன்றைய இந்தியாவில் விவசாயிகள் படும் துன்பங்கள் அனைத்துக்கும் ஆட்சியாளர்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று உரையாற்றினார்.
புதுடில்லி: அமெரிக்காவிலிருந்து, முதல் கச்சா எண்ணெய் கப்பல், இன்று இந்தியா வந்தடைகிறது. நாட்டின் தேவையில் குறிப்பிட்ட பங்கை, அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி நிறைவு செய்வதால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.1975ல் தடைஅமெரிக்காவில் இருந்து இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, 1975ல் தடை விதிக்கப்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளான, ஈரான், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றிட மிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜூனில், […]
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 174 நாள்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு எடுக்க முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மீண்டும் தொடங்கும் என்று எச்சரித்தனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, […]
தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் […]