டில்லியில் உள்ள பாஜக சட்டபேரவை உறுப்பினர் ஜிபேஷ் குமார் அவரது வீடு அருகில் உள்ள ரோஹினி செக்டார்-23ல் சென்று கொண்டிருந்த பொது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள்புதிய ஐஃபோன் 7 ரக மொபைலை பறித்து சென்றனர். ஜிபேஷ் குமார் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிற்றனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி .சாக்கடை வாளியுடன் கொசு வலையுடன் தெற்கு மண்டல அலுவலகத்தில் புறநகர செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில்,புறநகர குழு உறுப்பினர் டேனியல் ,வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆனந்த்,மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர் .
இந்தியன் ரயில்வே பொதுத்துறை நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 4690 பதிவு செய்யும் லிங்: https://goo.gl/et7igJ வேலை: அனைத்து விதமான வேலைகள் பதிவு செய்ய கடைசி நாள் : 29.10.2017
கடலோர கிராம விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியானது தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது .ஏராளமான மாணவ,மாணவிகள், கலந்து கொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்பூர் பகுதியில் அரசு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பள உயர்வு,ஓய்வூதியம், பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இப்போராட்டத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கெடுத்து உள்ளனர்.
ரூ.196 கோடியில் ராமர் சிலை இதிகாச பாத்திரமான, ராமருக்கு, ரூ. 195 கோடியே 89லட்சம் செலவில் சுமார் 328 அடி உயரத்திற்கு சிலை அமைக்கஉத்தரப்பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ராமர் பிறந்தார் என்று கூறப்படும்- உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள இடத்திற்கு அருகே சரயூ ஆற்றங்கரையில் சிலை அமைகிறது. உத்தரப்பிரதேச பாஜக அரசின் சிலை அமைக்கும் முடிவுக்கு மோடி அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திருப்பதுடன், சிலை அமைப்பதற்கான முழுச்செலவையும் ஏற்று, உடனடியாக ரூ. 133 […]
அதிமுகவின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன் உட்பட பல்வேறு கட்சியினர் பிஜேபியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நேற்று திருநெல்வேலி பாளை ஜவகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிஜேபி கட்சியில் இணைந்தார்கள்.
டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகையீட்டு போராட்டம் நடத்தினர். பாளை தாலுகா செயலாளர் கருணா தலைமை தாங்கினார், நெல்லை தாலுகா செயலாளர் அசோக், தலைவர் நம்பிகுமார், பொருளாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர் ராஜகுரு, துணைச் செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் பிரபாகரன், பாளை தாலுகா பொருளாளர் ஜான், கௌதம், ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு நிதி […]
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பிஜேபி கட்சி அலுவலகத்தை கேரளா மாநில காவல்துறை மற்றும் வெடிகுண்டு துப்பறியும் குழு நடத்திய சோதனையில் கத்தி,அருவா,வாள் மற்றும் வெடிகுண்டு போன்ற கொடூரமான ஆயுதங்களும் கிடைத்துள்ளன… பிஜேபி கட்சியின் அலுவலகத்திற்குள் எப்படி இந்த ஆயுதங்கள் வந்தன என்பது குறித்து கேரளா காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.நேற்றிற்கு முன்தினம் கேரளாவை ஆளும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய அமைதி பேரணியில் நாட்டு வெடிகுண்டு விசப்பட்டது. இதனால் பலர் படுகாயம் அடைந்தனர். கடந்த வாரம் […]
குஜராத் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டார் ராகுல். இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முக்கியமான வர்த்தக நகரான வடோதராவில் (பரோடா) நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. காரணம், அவர் செல்லுமிடங்களில் எல்லாம், தனது குடும்பமானது தீவிரவாதத்துக்கு பலியாகியிருக்கிறது என்று எப்போதும் […]
மூத்த பத்திரிகையாளர, எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரபல ரவுடிக்கும், அவருடைய கூட்டாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சிறப்பு விசாரணை குழுவினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. பெங்களூரூவில் பெண் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கவுரி லங்கேசை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து கொலையாளிகளை பிடிக்க சிறப்பு விசாரணைக்குழு […]
கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் […]