ஃபுளோரிடா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ GSAT N2 என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் தகவல் தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவரல் ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான் 9 (Falcon 9) ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. GSAT N2 வடிவமைப்பு : இஸ்ரோ வடிவமைத்த இந்த GSAT N2 செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது. GSAT N2 […]
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு வந்தது. மொழி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் இருக்கும். அதில் தேவை இருப்பின் இந்தி மொழி தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், இன்று காலை முதல் LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் […]
ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் 19-வது ஜி20 உச்சி மாநாடானது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு விவாதம் நடத்தி வருகின்றனர். இதில், ‘சமூக உள்ளடக்கம், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்’ என்பது பற்றி பிரதமர் மோடி பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்திக்க திட்டமிட்டிருந்தார். அந்த வகையில் இத்தாலி […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக நன்னிலம் 6 செ.மீ., திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2 மணி மணி நேரத்திற்குமழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுகை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி, […]
டெல்லி : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினமான இன்று (நவம்பர் 19) டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தனது பாட்டி இந்திரா காந்தி பற்றி காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “அன்பு மற்றும் தைரியம் என இரண்டுக்கும் உதாரணமாக எனது பாட்டி (இந்திரா காந்தி) திகழ்கிறார். தேச நலன்களுக்கான பாதையில் அச்சமின்றி […]
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி ஆரம்பித்து தனது முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27இல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதுவரை திரையில் கண்ட தங்கள் ஆஸ்தான ஹீரோவை கட்சித் தலைவராக காண மாநாட்டிற்கு ரசிகர்கள் தொண்டர்களாக வெள்ளம் போல திரண்டனர். சுமார் 13 லட்சம் பேர் தவெக முதல் மாநாட்டில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாட்டில் விஜய் பேசிய திராவிடம், […]
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் என்பவரை கடந்த நவம்பர் 13ஆம் தேதி விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார். தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் கூறியதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளி விக்னேஷ் கைது கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிரேசில், ரியோவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், நேற்று உரையாற்றிய மோடி, ‘பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகள் மிகக் […]
கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா அமோக வெற்றி பெற்று இலங்கையின் அதிபராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் கடந்த நவ-14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், மீண்டும் அதிபர் அனுரா குமார கட்சி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில், நேற்று இலங்கையில் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூர்ய பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் தனது வெளிநாட்டு […]
ரியோ டி ஜெனிரோ : கடந்த 16-ம் தேதி 5 நாட்களாக அரசு முறை பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து புறப்பட்டார். முதலில் நைஜீரியாவின் தலைநகர் அபுஜா சென்ற அவர் அதனைத் தொடர்ந்து, ஜி20 உச்சி மாநாட்டிற்கு பங்கேற்பதற்காக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்றார். அங்கு பிரேசிலுக்கான இந்திய தூதர் சுரேஷ் ரெட்டி மற்றும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு, நேற்று உச்சி மாநாடு தொடங்கியது. இதில், […]
சென்னை : வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வலி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஒரு சில தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு […]
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 வயதுடைய தெய்வானை எனும் பெண் யானை திருச்செந்தூர் முருகன் கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த யானையை பராமரிக்கும் பொறுப்பை பாகன் உதயகுமார் என்பவர் மேற்கொண்டு வந்துள்ளார். இவரது உறவினர் சிசுபாலன் என்பவர் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணியளவில் […]
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக பயணித்து வருகிறது. தற்போது தொழில்நுட்ப பயனர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால், அதில் சில ஆபத்துகளும் உள்ளன என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்தும் வருகின்றனர். அமெரிக்க மாணவன் ஒருவன் வீட்டு பாடம் செய்ய கூகுள் AI இயங்குதளமான Gemini சாட் பாக்ஸில் உதவி கேட்டுள்ளார். அதற்கு அந்த […]
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி வருகிறது. இதற்கான முதற்கட்ட பணியாக, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள சத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்த்து. இந்த குழு ஆய்வு செய்ததில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் […]
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பரப்புரை பணியில் மிக தீவிரமாக ஈடுப்பட்டு வந்தனர். இந்த தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் மேற்கண்ட […]
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேத்திற்கு (இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், […]
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் தெய்வானை எனும் 25 வயது மதிக்கதக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் பாகனாக உதயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். இன்று இவரை காண பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் களியக்காவிளை பகுதியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில், திடீரென கோயில் […]
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி இடம் மாற்ற மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பிராட்வே – முகப்பேர் (7M), வடபழனி – தரமணி (5T) ஆகிய இரு வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சியிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல் […]
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக கட்சிகள் குறித்தும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை கூறினார். திமுக ஆட்சி பற்றி சீமான் கூறுகையில், “எங்கு போனாலும் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என மக்கள் கூறுவதாக முதல்வர் கூறுகிறார். அப்படியே என்னோடு வாருங்கள். மனுவோடும் கண்ணீரோடும் காத்திருக்கும் மக்களை காட்டுகிறன். ஆட்சி சூப்பர் […]