ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில் உள்ள நகரத்தின் பெரிய பில்டிங் மீது வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் மோதி வெடித்து சிதறியது. இதனால் நகரின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது ரஷ்ய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கசான் நகரத்தில் உக்ரைன் நடத்திய, இந்த ஆளில்லா ட்ரோன் தாக்குதல் 9/11 பாணியில் இருப்பதாக பலரும் குறிப்பிடுகின்றனர். இந்த கசான் நகரம் மாஸ்கோவிலிருந்து […]
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று இருந்த வேலூர் மாவட்ட ஆலய மேம்பாட்டு பிரிவு நிர்வாகி விட்டல்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விட்டல்குமார் உயிரிழப்பு கொலை என்றும் இதற்கு வேலூர் மாவட்டம் நாகல் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பாலா சேட் என்பவர் தான் காரணம் என்றும் பாஜகவினர் வேலூர் அரசு மருத்துவமனையில் தொடர் […]
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் அப்பகுதினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தும்கூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக 3 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து நடந்த உடனே, காரில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ அப்பகுதி மக்களும், பயணிகளும் விரைந்து வந்தனர். SUV யில் இருந்து […]
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில் Centaurus Lifestyle Brands Private Ltd எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக PF பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் முறையாக PF பணத்தை EPFOவிடம் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். ஆனால், […]
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் குரலை வீறுகொண்ட வீரர்களாக மக்களவையில் திமுக எம்.பிக்கள் முழங்கியதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இக்கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்து, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி கவனத்தை ஈர்த்த திமுக எம்.பிக்களின் செயல்பாடுகளைப் பார்த்து, […]
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் பற்றியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாக திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள வெளியிடப்பட்டுள்ள பதிவில் ” நமது நாட்டின் பெருமைமிக்க அரசியல் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின்போது – பா.ஜ.க. ஆட்சியின் கையில் “நாடாளுமன்ற ஜனநாயகம்” எப்படி பிய்த்து […]
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. குவைத்தின் மன்னர் எமிர், ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அங்கு செல்கிறார். குறிப்பாக, இந்த பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியா தொழிலாளர்கள் தங்கி […]
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சுவாமி வழிபாடு செய்வதற்காக வந்திருக்கிறார். அப்போது, தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளார். அப்போது தவறுதலாக தினேஷின் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐபோன் உண்டியலில் விழுந்துள்ளது. ஐபோன் உண்டியலில் விழுந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த தினேஷ் உடனடியாக தன்னுடைய போன் இப்படி உண்டியலில் தவறுதலாக விழுந்துள்ளது அதனை எடுத்து கொடுங்கள் என நிர்வாகத்தினர் […]
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த பார்சலில், பாதி வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார், அவரது குடும்பத்தினரும் அச்சமடைந்தனர். அதுமட்டும் இல்லாமல் பார்சலுடன் ஒரு கடிதம் வர, அதில் ‘ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வீடு கட்டும் பணிக்காக மின்விளக்குகள், மின்விசிறிகள், சுவிட்சுகள் போன்றவை […]
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை, வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாபட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோப்பன்பட்டி, மோப்பன்பட்டி, சத்திரப்பட்டி, நரசிங்கபுரம், சாணிப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, பூசாரிபட்டி ஈரோடு : பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட் பெரம்பலூர் : புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் புதுக்கோட்டை […]
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் அவருடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நேற்று ஈரோடு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் பேசியிருந்தது ” டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை சொல்கிறார். அதைப்போல, […]
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 390 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது தமிழ்நாடு விசாகபட்டினத்தில் இருந்து 430 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆந்திரா – தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அம்பேத்கர் குறித்து […]
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அந்த சமயம், திடீரென ஒரு கார் ஒன்று சந்தையில் நுழைந்து வேண்டுமென்றே அங்கிருந்தவர்களை தாக்க தொடங்கியது. இந்த கொடூரமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 68 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட […]
சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை சேர்த்து தமிழக அரசு அதற்கான புதிய தேடுதல் குழுவிற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று ஆளுனர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை மூலமாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” பல்கலைக்கழக துணைவேந்தர் காலியிடங்களை […]
டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL) 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த சில நாட்களாவே சம்பல் தொகுதியில் தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது. அந்த வகையில், இவரது வீட்டில் நேற்று மின்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முறைகேடுகளை துறை கண்டறிந்தது. பர்க்கின் வீட்டில் உள்ள சுமை அவரது இணைப்பின் வாட்டேஜை விட அதிகம் […]
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றிய தகவலை டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் தனது […]
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மாண்டலமானது வடக்கு வடகிழக்கில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு […]
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கோவை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது உடல் டிசம்பர் 17இல் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்.ஏ.பாஷா இறுதி ஊர்வலத்திற்கு தமிழக காவலத்துறை அனுமதி அளித்து இருந்தது. இதனை கண்டித்து பாஜக சார்பில் இன்று கருப்பு தின பேரணி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த காலங்களை போல இந்த கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகள் அமளி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு, முக்கிய சட்டமசோதா நிறைவேற்றம் என்றில்லாமல் இறுதிவாரமான இந்த வாரம், பாஜக எம்பிக்கள் போராட்டம் போன்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. கடந்த கூட்டத்தொடர் போலவே, இந்த கூட்டத்தொடரிலும் அதானி குறித்தும், மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் […]
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை 5:30 மணியளவில், பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி டேங்கர் லாரி மற்ற வாகனங்கள் மீது டிரக் மோதியதில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 40 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதனையடுத்து, சுமார் 20 வாகனங்களில் வந்த தீயணைப்பு […]