ஏழு மாதங்களில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடிக்க ஜைடஸ் காடிலா முடிவு!
ஏழு மாதங்களில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடிக்க ஜைடஸ் காடிலா முடிவு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், மருத்துவ நிறுவனமான ஜைடஸ் காடிலா, ஏழு மாதங்களில் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.
மேலும், இந்நிறுவனம் மனிதர்களிடம் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை முடித்து தரவுகளை ஒழுங்குபடுத்துபவரிடம் சமர்ப்பிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக, ஜைடஸ் காடிலா தலைவர் பங்கஜ் ஆர் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆய்வு முடிவுகளைப் பொறுத்து, சோதனைகளின் போது தடுப்பூசி பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தால், சோதனைகள் முடிவடைவதற்கும் தடுப்பூசி தொடங்கப்படுவதற்கும் மொத்தம் ஏழு மாதங்கள் ஆகலாம் என்று அவர் கூறினார்.