சைகோவிக்-டி தடுப்பூசிக்கு அனுமதி: சைடஸ் நிறுவனத்தின் பங்குகள் 4% உயர்வு..!
இந்தியாவின் சைக்கோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதன் நிறுவனமான சைடஸ் கேடிலா நிறுவனத்தின் பங்குகள் 4% அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகத்தை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து காத்துக்கொள்ள தடுப்பூசிகளை செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்புகளாக கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீரம் இந்தியா, பாரத் பயோடெக் நிறுவனங்களை தொடர்ந்து அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கெடிலா நிறுவனமும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. சைகோவ்-டி என்ற பெயரில் உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சைகோவ்-டி தடுப்பூசி இந்தியாவிலேயே முதன்முதலில் 12 முதல் 18 வயதுடையவர்களுக்காக தயாரிக்கப்பட்டது. மேலும், இந்த தடுப்பூசி ஊசி மூலம் மருந்து செலுத்தாமல் இன்ஜெக்டரை பயன்படுத்தி செலுத்தப்படும். இதனை அடுத்த படியாக இந்த தடுப்பூசியின் பக்க விளைவுகளும் மிகவும் குறைவானது.
இந்த தடுப்பூசியை 50 இடங்களில் 1000 குழந்தைகள் உட்பட 28 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தடுப்பூசிக்கு கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி அரசு ஒப்புதல் அளித்தது. பங்குகளில் முதல் நாளான இன்று இந்த நிறுவனத்தின் பங்குகள் தற்போது 4% அதிகரித்துள்ளது.