குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
தற்பொழுதைய காலத்தில் வீட்டில் சமைக்கப்படக் கூடிய உணவை விட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி உண்ணக் கூடிய உணவுகள் தான் அதிக அளவில் பிரபலமாகி உள்ளது. அதிலும் கேட்ட நேரத்தில் உடனடியாக கொண்டு வந்து கொடுக்க கூடிய ஊழியர்கள் மழையோ வெயிலோ எதையும் பாராமல் மக்களுக்காக உழைக்கின்றனர். அவர்களும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் ஊதியத்தை நம்பியும் தான் இவ்வளவு தூரம் உழைக்கின்றனர்.
இந்நிலையில், சிறந்த ஆன்லைன் உணவு நிறுவனமான ஸ்விக்கி டெலிவரி நிறுவனத்தின் நொய்டாவில் உள்ள ஊழியர்கள் குறைந்த ஊதியம் கொடுப்பதால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீ ஹர்ஷா அவர்கள், கொரோனா வைரஸ் தொற்றின் போது உணவு மற்றும் அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதற்கு பல்வேறு கடினமான நேரங்களிலும் ஊழியர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி இருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நிர்வாகிகள் ஒரு ஆர்டர் குறைந்தது 35 டாலராவது செலுத்த வேண்டும் எனவும் மாதாந்திர ஊக்கத்தொகையை மீண்டும் கொடுக்க வேண்டுமெனவும் கோரி போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.