மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட மிசோரத்தில் ஆட்சி அமைக்க போவது யார் என்று உறுதியானது.
மிசோரமில் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 21 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போது, ஆட்சியில் உள்ள மிசோ தேசிய முன்னணி (MNF), ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ், பாஜக என போட்டி நிலவியது.
ஆனால், ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF) கட்சியை வீழ்த்தி, மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. அந்த வகையில், இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் ZPM கட்சி தான் தொடர்ந்து முன்னிலை வகிக்கு வந்த நிலையில், தற்போது வெற்றி குறித்த அறிவிப்புகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பரபரக்கும் குளிர்கால கூட்டத்தொடர்… இன்றைய நாடாளுமன்ற நிகழ்வுகள்…
அதில், ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுபோன்று, ஆளுங்கட்சியான மிசோ தேசிய முன்னணி (MNF) கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்று ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி, ஒரு இடத்தில முன்னிலை வகிக்கிறது. மிசோரத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 21 தொகுதிகளே போதும் என்ற நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மிசோரத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) ஆட்சியை பிடிக்கிறது.
ZPM-யின் முதல்வர் வேட்பாளர் லால்துஹோமா, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநரை சந்திக்க உள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் நான் ஆளுநரை சந்திப்பேன், இந்த மாதத்திற்குள் பதவியேற்பேன் என்று லால்துஹோமா கூறினார். இதனிடையே, பிஜேபி தலைமையிலான NDA-வின் ஒரு அங்கமான, ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு ஒரு பெரிய அடியாக, முதல்வர் ஜோரம்தங்கா ஐஸ்வால் கிழக்கு-I தொகுதியில் ZPM-இன் லால்தன்சங்காவிடம் 2,101 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்- ஆளுநர் அறிவுறுத்தல்
1987ல் முழு மாநில அந்தஸ்தை அடைந்ததில் இருந்து மிசோரமின் அரசியல் நிலப்பரப்பில் காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி (MNF) ஆதிக்கம் செலுத்தி வருகிறது. MNF-இன் தலைவரும் முதலமைச்சருமான ஜோரம்தங்கா இந்தத் தேர்தலில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1998 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து முதலமைச்சரானார். 2008 மற்றும் 2013ல் காங்கிரஸ் வெற்றி பெறும் வரை MNF ஒரு தசாப்த காலம் மிசோரத்தில் ஆட்சி செய்த இலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேலும், MNF துணை முதல்வர் டவ்ன்லூயா 909 வாக்குகள் வித்தியாசத்தில் ZPM வேட்பாளர் சுவானாவ்மாவிடம். துய்சாங் தொகுதியில் தோல்வியடைந்தார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…