யார் பிரதமர் என்று கணித்தால் உங்களுக்கும் பரிசு! சோமேட்டோ நிறுவனம் அறிவிப்பு!

Default Image

ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர புதுப்புது உத்திகளை கையாளுகிறது. அதேபோல் தற்போது சோமேட்டோ ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமானது தற்போது புதிய போட்டி அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று 3 விருப்பங்களை அந்நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வைத்துள்ளது. மோடி, ராகுல், மற்றவர்கள் என அந்த விருப்பத்தில் உள்ளது. அதில் யாருக்கேனும் விருப்பம் தெரிவித்தால் அதன் முடிவுகள் மே 23-இல் வரும் தேர்தல் முடிவுகளை ஒத்து இருந்தாளல், வெற்றிபெற்ற வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் இதேபோல ஐபிஎல் போட்டிகளின் போதும் வாடிக்கையாளரை கவர ஒரு போட்டி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்