540 ஊழியர்களுக்கு டாட்டா காட்டிய சொமாட்டா நிறுவனம்! காரணம் என்ன?!
ஆன்லைன் உணவு விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனம் சொமாட்டா. இந்நிறுவனத்தில் தற்போது 540 ஊழியர்களுக்கு வேலை பறிபோய் உள்ளது. இதற்கு காரணமாக தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தை மேம்படுத்தி வேலைப்பளுவை குறைப்பது என காரணம் கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ( customer care ) வேலை செய்யும் ஊழியர்களில் 540 பேரை நீக்க முடிவு செய்து, அவர்களுக்கு 3 முதல் 4 மாத சம்பளம் சேர்த்து கொடுத்து வேலையை விட்டு தூக்கியுள்ளது.