Zomato நிறுவனத்தின் பெயர் ‘Eternal’ என மாற்றம்! காரணம் என்ன.?
Zomato, Blinkit மற்றும் Hyperpure போன்ற அதன் வணிகங்களை 'Eternal Limited' என்ற பெயரில் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![Zomato - Eternal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Zomato-Eternal-1.webp)
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான முடிவு Zomatoவின் வாரியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Zomato Ltd இனிமேல் Eternal Ltd என்று அழைக்கப்படும்.
அதன்படி, Zomato, Blinkit மற்றும் Hyperpure போன்ற அதன் வணிகங்களை ‘Eternal Limited’ என்ற பெயரில் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நிர்வாகம் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், இந்த தகவலை அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த ஒழுங்குமுறை தாக்கல் செய்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனினும், ஜொமாட்டோ என்ற ஆப்பின் பெயர் மாற்றப்படாது. Blinkit ஆப்பும் Eternal Ltd-இன் அங்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் மாற்றம் காரணம்
இது பற்றி ஜொமாட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் கூறுகையில், ‘நாங்கள் பிளிங்கிட்டை வாங்கியபோதுதான், தாய் நிறுவனத்தை Zomato என்பதற்குப் பதிலாக Eternal என்று அழைக்கத் தொடங்கினோம். இதற்கு காரணம், நிறுவனம் மற்றும் பிராண்ட், ஆப் ஆகியவற்றை வேறுபடுத்துவதே இதன் நோக்கமாகும்.
எனவே, இதனை வெளிப்படையாக அறிவித்து பொதுவெளியிலும் பெயர் மாற்ற முடிவெடுத்தோம். மேலும், Zomato நிறுவனத்தின் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், செயலி பெயரில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நேரத்தில், பெயர் மாற்றத்தை நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. எனவே எங்கள் பங்குதாரர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டதும், நிறுவனத்தின் இணையதளம் ‘சொமடோ.காம் (zomato.com) என்பதில் இருந்து எடெர்நல்.காம் (eternal.com) என மாறும்.