மெர்சிடிஸ் கார் மோதியதில் சோமாடோ டெலிவரி இளைஞர் உயிரிழப்பு.!
மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலையில் மெர்சிடிஸ் கார் ஒன்று தனது ஸ்கூட்டரில் மோதியதில் 19 வயது சோமாடோ டெலிவரி நபர் உயிரிழப்பு.
மகாராஷ்டிராவின் மும்பை ஓஷிவாரா பகுதியில் இன்று அதிகாலை வேகமாக வந்த மெர்சிடிஸ் கார், அப்போது சோமாடோ டெலிவரி செய்ய வந்த 19 வயது இளைஞரின் ஸ்கூட்டரில் மோதியுள்ளது. சதீஷ் என அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தை விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உறவினர் பிரபல தொலைக்காட்சிடம், மும்பையில் ஒரு முகவரிக்கு காலை 2:30- 3 மணி வரை உணவு வழங்குவதற்காக அந்த இளைஞர் சென்று கொண்டிருந்தபோது, அவரது ஸ்கூட்டரை மெர்சிடிஸ் கார் மோதியது என்று கூறியுள்ளனர். விபத்து நடந்தபோது சதீஷ் ஒருவருக்கு ஒரு பார்சலை வழங்கப் சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலில் உள்ள மெர்சிடிஸின் ஓட்டுநரிடம் ஓஷிவாரா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.