ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாம் வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதால் ஜொமாட்டோவில் இருந்து விலகுவதாக கவுரவ் குப்தா விளக்கம் கொடுத்துள்ளார்.
குப்தா 2015 இல் ஜோமாட்டோவில் சேர்ந்தார். இதற்குப் பிறகு, 2018 இல், அவர் தலைமை இயக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். இதற்குப் பிறகு, 2019 இல், அவருக்கு ஸோமாட்டோ நிறுவனர் அந்தஸ்து வழங்கப்பட்டது. கவுரவ் குப்தா ராஜினாமா செய்த செய்திக்கு பிறகு, நிறுவனத்தின் பங்குகள் மேல் மட்டத்தில் இருந்து ரூ.10 க்கும் மேல் சரிந்துள்ளது. முன்பு ரூ.151 இல் இருந்த பங்கு இப்போது ரூ .140 ஆக குறைந்துள்ளது.
சென்ற ஆண்டு தொடக்கத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் சேவையை ஜொமாட்டோ நிறுவனம் விரிவுபடுத்தியது. அதற்கு அப்போது நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் தற்போது அந்த சேவை மந்தமானதால் டெலிவரி செய்யும் சேவையை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஜொமாட்டோ நிறுத்தப்படுவதாக கடந்த வாரம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…