புனேவில் வேகமெடுக்கும் ஜிகா வைரஸ்.. கர்ப்பிணிக்கும் தொற்று பரவல்.! முழு விவரம்..

Zika virus - Pune

மகாராஷ்டிரா : புனேவில் ஏடிஎஸ் கொசு மூலம் பரவும் ஜிகா வைரசால், மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 2 கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து புனேவில் அந்த வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு நடத்தி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.

பாலியல் பரவுதல்

பாதிக்கப்பட்ட நபருக்கு அறிகுறிகள் இல்லாவிட்டாலும், பாதிக்கப்பட்ட கூட்டாளருடனான பாலியல் தொடர்பு மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவுகிறது.

எதனால் எவ்வாறு பரவுகிறது 

ஜிகா வைரஸ் என்பது கொசுக்களால் பரவும் வைரஸ் ஆகும். குறிப்பாக, ஏடிஸ் ஈஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசுகள் மூலமாக ஜிகா வைரஸ் பரவுகிறது.

அறிகுறி என்ன?

ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் இருக்கலாம் அல்லது ஒரு வாரம் வரை நீடிக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கலாம். இதனால் பாதித்தோருக்கு லேசான காய்ச்சல், தோல் தடிப்பு, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, கண் இமைகளின் உட்பகுதியில் எரிச்சல் இருக்கும். இந்த அறிகுறி பொதுவாக 2-7 நாள்களுக்கு நீடிக்கும். அறிகுறிகள் மோசமடைந்தால், மருத்துவரை நாட உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.

பாதுகாப்பு வழிமுறை 

பூச்சி விரட்டியைப் பயன்படுத்துதல், நீண்ட கை சட்டை மற்றும் பேன்ட் அணிதல், கொசு கடிப்பதைத் தடுக்க ஏர் கண்டிஷனிங் பயன்படுத்தல் அல்லது வீடுகளில் ஜன்னல் அனைத்தும் புட்டுதல். குறிப்பாக, பாலியல் மூலமாக பரவுவதைத் தடுக்க ஆணுறைகளை சரியாகவும் தொடர்ச்சியாகவும் பயன்படுத்துதல். மேலும், ஜிகா வைரஸ் பாதிப்புகள் உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்