கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், இரண்டு பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், தற்போது சிகிச்சையில் 8 பேர் மட்டுமே உள்ளனர். அதில் மூன்று பேர் கர்ப்பிணி பெண்கள். இந்த ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பில் முதல் நோயாளியும் அடுத்த 13 சுகாதார ஊழியர்களும் அனயாராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அனயாராவின் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் ஒரு கொத்து ஜிகா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் கொசுக்கள் பரவுவதைத் தடுக்க இப்பகுதியில் உள்ள கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஜிகா வைரஸ் தொற்று குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். ஜிகா வைரஸுக்கு எதிராக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறினார்.
வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு அருகிலேயே கொசுக்களின் இனப்பெருக்கம் நடைபெறும் வகையில் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…