எல்லை பாதுகாப்பு படை, ஜீரோ பரேட் (zero parade) அணிவகுப்பை “மோடி புரோகிராம்” எனக் குறிப்பிட்ட வீரருக்கு, பிரதமரை அவமதித்து விட்டதாக ஏழு நாள் ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
வருகைப் பதிவேட்டுக்கான ஜீரோ பரேடை, மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்ற வீரர் மோடி புரோகிராம் எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதை அறிந்த உயர் அதிகாரிகள், எல்லைப் பாதுகாப்புப் படைச் சட்டம் பிரிவு 40ன் கீழ் சஞ்சீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கினர்.மாண்புமிகு பிரதமரை மோடி எனக் குறிப்பிட்டதால், 7 நாள் ஊதியம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.