Categories: இந்தியா

முதுகலை மருத்துவ படிப்புக்கு பூஜ்ஜியம் நீட் கட் ஆஃப்..! எதிர்ப்பு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!

Published by
செந்தில்குமார்

மருத்துவ இளங்கலை, முதுகலை படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த தேர்வானது இந்தியா முழுவதும் நடைபெறக் கூறிய  பொது நுழைவு தேர்வாகும். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.

அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு மூலம் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும், எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3வது கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான 3வது சுற்று கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடன் மத்திய அரசின் அறிவிப்பால் நீட் தேர்வு நடத்தப்படுவது அர்த்தமற்றதாக மாறிவிட்டது என்று பலரும் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து நீட் கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மனுதாரர் முறையிட்டதை அடுத்து இந்த மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.

இந்த விசாரணையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த அறிவிப்பால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை என்று கூறிய உச்சநீதிமன்றம், முதுகலை நீட் கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கர்நாடகாவில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி!

பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…

30 seconds ago

“வணங்கானில் என்னை கோட்டியாக வாழ வைத்த என் இயக்குனருக்கு நன்றி” – அருண் விஜய் உருக்கம்.!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…

20 minutes ago

பும்ரா இல்லைனா ‘இவர்’ தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்

டெல்லி  : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025  கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…

26 minutes ago

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த…” விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…

1 hour ago

“இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் மனிதாபிமான உதவிகளுக்கு வழிவகுக்கிறது..” இந்தியா வரவேற்பு!

டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…

1 hour ago

ஸ்பேடெக்ஸ் திட்டம் : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…

2 hours ago