பிரதமர் நரேந்திர மோடி உகாதி பண்டிகையைக் கொண்டாடுவதை முன்னிட்டு வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தெலுங்கு கன்னட மக்கள் உகாதி பண்டிகையைக் கொண்டாடுவதை முன்னிட்டு டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார்.
உகாதி என்றால் புதுயுகத்தின் தொடக்கம் என்று அதன் பெருமைகளைப் பட்டியலிட்ட பிரதமர், ஸ்ரீசைலத்திற்கு வருகை தருபவர் அனைத்துக் கட்டுகளில் இருந்து விடுபட்டு உயர்வடைவார்கள் என்று மகரிஷி வேத வியாசர் கூறியதை மேற்கோள் காட்டினார்.
இந்தியாவை உள்நாட்டு பலவீனங்களில் இருந்து விடுதலைப் பெற வைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக மோடி தெரிவித்தார். சாதி மதம் மட்டுமின்றி பல்வேறு பலவீனங்களும் நாட்டை ஆட்டிப் படைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் சேதப்படுத்த நடத்தப்பட்ட முயற்சிகளை நாம் நமது மரபுகளின் பலத்தால் கடந்து வந்திருக்கிறோம் என்றும் மோடி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.