தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற YSR காங்கிரஸ்.!

Default Image

டெல்லி: ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 5,39,189 தபால் வாக்குகள் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியது.

இந்த பதிவான தபால் வாக்குகளில், படிவம் 13ஏ-வில், கையெழுத்திடும் அதிகாரி, அவர் கையொப்பம் மட்டுமல்லாது, பதவி மற்றும் முத்திரை இருக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறையை தளர்த்தி ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் YSR காங்கிரஸ் கட்சி , ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தை நாடியது. ஆனால் தேர்தல் விதிமுறை அமலில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்து உள்ளதால் தற்போது இந்த வழக்கை விசாரிக்க முடியாது என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய சுற்றறிக்கையை எதிர்த்து YSR காங்கிரஸ் கட்சி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், தேர்தல் விதிமுறை பயன்பாட்டில் இருக்கும் போது, அதனை திருத்துவது என்பது சட்டத்திற்கு எதிரானது, மேலும், இந்த தளர்வு என்பது ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு மட்டுமே என்பதும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் YSR காங்கிரஸ் தங்கள் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்