ஆந்திராவில் பயங்கரம்…!ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் மீது கூர்மையான கத்தியால் தாக்குதல் …!
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கத்தியால் தாக்கப்பட்டார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. அவரின் பின்னால் இருந்து ஸ்ரீனிவாசன் என்ற மர்ம நபர் கூர்மையான கத்தியால் தாக்கியுள்ளார். கூர்மையான கத்தியால் தாக்கியதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
கத்தி குத்தில் காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.சீனிவாசன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.