ஜார்க்கண்ட்டை சேர்ந்த யூடுபர் வழிப்பறி கொள்ளையில் சுட்டுக்கொலை
ஜார்கண்ட்டை சேர்ந்த யூடியூபரும் நடிகை ரியா குமாரி( இஷா ஆல்யா) கொள்ளை முயற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து கொல்கத்தா நோக்கி காரில் தனது கணவர் மற்றும் இரண்டரை வயது மகளுடன் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காலை 6 மணியளவில் பாக்னன் காவல் நிலையப் பகுதியில் சற்று ஓய்வெடுக்க காரை அவர் கணவர் நிறுத்தியபொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கி, அவரது பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளது.
கணவரைக் காப்பாற்ற அவரது மனைவி காரை விட்டு இறங்கியபோது , அவர்கள் அவரைச் சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.