டெல்லியில் கேஸ் விலையை குறைக்க கோரி இளைஞர்கள் அரை நிர்வாண போராட்டம்!
கேஸ் விலையை குறைக்க கோரி டெல்லியில் உள்ள இளைஞ்சர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே டெல்லி எல்லையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்பொழுது அடுத்த போராட்டத்தில் இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். மெட்ரோ நகரங்களில் கடந்த 4 ஆம் தேதி முதல் மாநியமில்ல சமையல் எரிவாயுவின் விலை 25 ருபாய் அதிகரித்து அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த போராட்டத்தை காங்கரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் நடத்துகிறார்கள். ஒரு புறம் பெண்கள் சாலையில் வைத்து விறகடுப்பில் சமையல் செய்து போராட்டம் நடத்துகின்றனர். மறுபுறம் இளைஞர்கள் அரை நிர்வாணமாக போராட்டத்தை நடத்துகிறார்கள்.