கேரளாவை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் முடி உதிர்வு காரணமாக தற்கொலை.
கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு வயது 24. இவர் முடி உதிர்வு பிரச்சினை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார்.
இது குறித்து மருத்துவர் கூறுகையில் மருந்தை முதலில் சாப்பிடும் போது முடி முழுவதும் உதிர்ந்து விடும். அதன் பின் நன்றாக வளரும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்த பிரசாந்த், தலையில் மட்டுமல்லாது கை, கால், புருவங்களில் உள்ள முடி கூட உதிர ஆரம்பித்துள்ளது.
இதனால் மணமுடைந்த இளைஞர் பிரசாந்த் தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தனக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளையும் எழுதி இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அக்கடிதத்தில் தன்னால் வீட்டை விட்டு வெளியே வர இயலவில்லை. தலை முடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தான் காரணம் என எழுதியிருந்தார். இந்த இலையில், இது தொடர்பாக டாக்டர் ரபிக் மீது பிரசாந்தின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இருப்பினும் காவல்துறையினரின் விசாரணை திருப்திகரமாக இல்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் அதிகாரி அவர்கள் கூறுகையில், முதன்மை குற்றங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இருந்தாலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…