ஒரு பிஸ்சாவுக்கு ஆசைப்பட்டு ரூ.95,000 இழந்த இளைஞர்..!

Default Image
  • பெங்களூரில் ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி சோமாட்டோ ஆப்பை பயன்படுத்தி தனக்கு ஒரு பீட்சாவை ஆர்டர் செய்து உள்ளார்.
  • பீட்சா தாமதம் ஆனதால் ஒரு போலி வாடிக்கையாளர் சேவை மைய எண்ணிற்கு போன் செய்து பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார்.
  • பின்னர் அந்த மோசடி நபர் அனுப்பிய லிங்க் கிளிக் செய்ததும் ஷேக் கணக்கில் இருந்து  ரூ.95,000 எடுத்து கொண்டனர்.

பெங்களூரின் கோரமங்களாவில் வசிக்கும் என்.வி.ஷேக் என்பவர் டிசம்பர் 1-ம் தேதி மதியம் 1.30 மணியளவில், தனது தொலைபேசியில் இருந்த சோமாட்டோ ஆப்பை பயன்படுத்தி தனக்கு ஒரு பீட்சாவை ஆர்டர் செய்து உள்ளார்.

ஆனால் ஒரு மணிநேரத்திற்கு பிறகும் ஷேக் ஆர்டர் செய்த பீட்சா வரவில்லை அதைத் தொடர்ந்து ஷேக், ஒரு வாடிக்கையாளர் சேவை மைய எண்ணைத் தேடி அந்த எண்ணிற்கு போன் செய்து  நான் ஆர்டர் செய்த வரவில்லை எனவே பணத்தைத் திரும்பி அனுப்புங்கள் என கூறியுள்ளார்.

வாடிக்கையாளர் சேவை மைய நிர்வாகியாக போல  மோசடியில் ஈடுபட்ட நபர் ஷேக்கிற்கு போன் செய்து உள்ள செல் போனிற்கு ஒரு குறுந்செய்தி வரும் அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் உங்களது பணத்தை திரும்ப பெறலாம் என கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து ஷேக் போனிற்கு வந்த லிங்க்கை  கிளிக் செய்து உள்ளார்.அவர் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் மோசடியில் ஈடுபட்ட நபர் ஷேக்கின் வங்கி கணக்கின் விபரங்களை கைப்பற்றி விட்டனர்.

பின்னர் அடுத்த சிறிது நேரத்திலேயே ஷேக் கணக்கில் இருந்துரூ.45,000 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் அடுத்த சிறிது நேரத்தில் ரூ.50,000 எடுக்கப்பட்டது இதனால் ஷேக் மடிவாலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சோமாட்டோ  நிறுவனம் கூறுகையில் , எங்களிடம் வாடிக்கையாளர் சேவை மைய எண் கிடையாது என்பதை பல்வேறு தகவல் தொடர்பு சேனல்கள் வழியாக தெரிவித்து வருகிறோம்.

நாங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாகவே மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து தருகிறோம். தயவுசெய்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது தனிப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை யாரிடமும் கூற வேண்டாம் என கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்