சமீப காலமாக இளைஞர்கள் பலர் ஆபத்து என தெரிந்தும் ரயில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்வது , சாகசங்களில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
நண்பர்களுடன் விளையாட்டுக்காக சில இளைஞர்கள் செய்யும் சில செயல் விபரீதங்களில் போய் முடிந்து விடுகின்றன. தற்போது மும்பையில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்து உள்ளது. கடந்த 26-ம் தேதி மும்பையில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த 20 வயது தில்ஷன் என்ற இளைஞர் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் செய்து வந்து உள்ளார்.
தில்ஷன் சாகசம் செய்வதை தில்ஷன் நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து வந்து உள்ளார். அப்போது திடீரென ஆற்றுப்பாலத்தில் மோதி தில்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஓடும் ரெயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் எனவும் அது சட்டவிரோதமானது என இந்திய ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரெயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தில்ஷன் உயிரிழந்த வீடியோவை பதிவிட்டு ,அதில் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ரயிலில் இருந்து இறங்குவது , ஓடும் ரயிலில் ஏறுவது சட்டவிரோதமானது என எச்சரித்துள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…