இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது .!அதை பற்ற வைத்து விடாதீர்கள்-உத்தவ் தாக்கரே.!
- டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தினர்.அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
- மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி எனக்கு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவு படுத்தியது என உத்தவ் தாக்கரே கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அதில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தினர்.அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் , அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர்.
போலீசாரின் இந்த அத்துமீறலை கண்டித்து நேற்று டெல்லியில் பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியபோது, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கடுமையாக சாடினார்.
மேலும் “மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி எனக்கு ஜாலியன் வாலாபாக் சம்பவத்தை நினைவுபடுத்தியது. இளைஞர்கள் சக்தி வெடிகுண்டு போன்றது. அதை பற்ற வைத்து விடாதீர்கள் ” என கூறினார்.