காதலிக்கு பரிசு வழங்க ஐபோனைக் கொள்ளையடித்த இளைஞர் கைது..!

டெல்லியில் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக ஐபோனைக் கொள்ளையடித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 23 அன்று மேற்கு டெல்லியில் உள்ள ஒரு பூங்காவில் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து ஆப்பிள் ஐபோனை இரு நபர்கள் சேர்ந்து கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரு கொள்ளையர்கள் துவாரகா செக்டார் 14 பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதாக புதன்கிழமையன்று இரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் வலைவீசி குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐபோனை மீட்கப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, இரண்டு திருடங்களில் ஒருவரின் காதலிக்கு ஐபோனை சர்ப்ரைஸ் பரிசாக வழங்குவதற்காக தான் இந்த குற்றத்தை செய்ததாகவும், சில மலைப்பிரதேசங்களுக்குச் செல்வதற்காக தாங்கள் மற்றொரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025