ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குறித்து தவறான கருத்து தெரிவித்த இளைஞர் கைது.
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் வாட்ஸ்அப் செய்தியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர் அமைப்பின் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இது தொடர்பாக புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் சூப்பிரண்டு சக்ரேஷ் மிஸ்ரா கூறுகையில், கணேஷ் காலனியைச் சேர்ந்த விஷால் மௌரியா பகவத் பற்றி சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர் அமைப்பின் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புகார் அளித்தார்.
மேலும், அந்த நபரின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு, இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…