இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டிய 21 வயது மதிப்புத்தக்க பாகிஸ்தான் இளைஞரை ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் BSF கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
21 வயதான பாகிஸ்தான் இளைஞர் சமூக ஊடகங்கள் மூலம் நட்பாக பழகிய மும்பை பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது காதலியை சந்திக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அவர் சனிக்கிழமை இரவு ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்திற்கு அருகே இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது எல்லைப் பாதுகாப்புப் படை போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சமூக ஊடகங்கள் மூலம் நட்பாக பழகிய மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணைச் சந்திக்கும் நம்பிக்கையில் தான் எல்லையைத் தாண்டியதாக அந்த நபர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அந்த இளைஞரிடம் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அந்த இளைஞர் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூர் மாவட்டத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…