உங்கள் நிழல் இன்றைக்கு பூமியில் படாது
இன்றைய நாள் சென்னையில் நிழலில்லா நாளாக அனுசரிக்கின்றனர். இந்த நாள் எதற்காக இப்படி அழைக்கப்படுகிறது என்றால், சூரியன் தலைக்கு மேல் நேராக இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். ஏனென்றால் நிழல் சரியாக காலுக்குக் கீழே இருக்கும்.
சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். அதனால், தான் காலுக்கு கீழே நிழல் இருக்கிறது. .
இந்த நிகழ்வு, வருடத்திற்கு இருமுறை நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக ஏப்ரல் 24ம் தேதியும், அதேபோல் ஆகஸ்ட் 18 அன்றும் நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்வு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கண்டுகளித்தனர்.