உங்களின் ஓய்வு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது – தோனிக்கு பிரதமர் மோடி கடிதம்
2011 உலகக்கோப்பை வென்று கொடுத்த தருணம் இந்திய மக்களால் என்றும் மறுக்கப்படாது – தோனிக்கு பிரதமர் புகழாரம்.
கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எளிமையாக அறிவித்தார். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு ஒரு பெரிய ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என பலர் கோரிக்கை வந்தனர். ஐபிஎல் போட்டி துபாயில் நடக்கயிருப்பதால் இதற்கு பிறகே தோனியின் பிரியாவிடை போட்டி குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் கூறப்பட்டது.
இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து அறிவிப்புக்கு, பிரதமர் மோடி நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வெற்றியோ, தோல்வியோ எல்லா நேரத்திலும் அமைதியை கடைபிடித்து சிறந்து விளங்கியவர் தோனி என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார். உங்களின் ஓய்வு 130 கோடி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறிய நகரத்தில் பிறந்து தேசத்தின் அடையாளமாக மாறியவர். கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிக சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளீர்கள். மேலும், உங்களது ஸ்டைலில் சிக்ஸர் விளாசி 2011 உலகக்கோப்பையை வென்று கொடுத்த தருணம் இந்திய மக்களால் என்றும் மறுக்கப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, தோனி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், ஒரு கலைஞர், சிப்பாய் மற்றும் விளையாட்டு வீரர் அவர்கள் விரும்புவது பாராட்டுக்குரியது, அவர்களின் கடின உழைப்பும் தியாகமும் அனைவராலும் கவனிக்கப்படுவதும் பாராட்டப்படுவதாகும். உங்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
An Artist,Soldier and Sportsperson what they crave for is appreciation, that their hard work and sacrifice is getting noticed and appreciated by everyone.thanks PM @narendramodi for your appreciation and good wishes. pic.twitter.com/T0naCT7mO7
— Mahendra Singh Dhoni (@msdhoni) August 20, 2020