உங்களின் கனவே எனது லட்சியம்.. இதுவே மோடியின் வாக்குறுதி – டெல்லியில் பிரதமர் உரை!

pm modi

தேசிய வாக்காளர்கள் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் வாக்காளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாட உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 5,000 இடங்களிலிருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இளைஞர்கள் தேர்தலில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார் எனவும் கூறப்பட்டது.

அதன்படி, டெல்லியில் முதல் முறை வாக்காளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் வகையில் பாஜகவின் யுவ மோர்ச்சா பிரிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்தர் மோடி, முதல் தலைமுறை வாக்காளர்களுடன் உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது, முதல் தலைமுறை அதாவது இளம் வாக்காளர்களுடன் இருப்பது எனக்கு உற்சாகத்தை தருகிறது. நீங்கள் இப்போது ஜனநாயக செயல்பாட்டின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டீர்கள்.

தேசிய வாக்காளர்கள் தினம் – இளம் வாக்காளர்களுடன் இன்று உரையாடும் பிரதமர் மோடி!

அடுத்த 25 ஆண்டுகளில், உங்களின் எதிர்காலத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். உங்களின் வாக்கு எதிர்கால இந்தியாவையும், நாட்டின் தொலைநோக்கு பார்வையையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது. நாட்டின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் போது, அரசு எடுக்கும் கொள்கை மற்றும் முடிவுகள் தெளிவானதாக இருக்கும். பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பிரச்னைகளை பாஜக அரசு தீர்த்து வைத்துள்ளது.

முக்கிய உலகத் தலைவர்களை நான் சந்திக்கும் போது, அவர்களை சந்திப்பது நான் மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களும் என்னுடன் இருக்கிறார்கள் என்று நான் உணர்கிறேன். இன்று, இந்திய பாஸ்போர்ட் உலகம் முழுவதும் பெருமையுடன் பார்க்கப்படுகிறது. முன்பு நாட்டில் நிலவிய சூழ்நிலை, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. ஊழல், முறைகேடுகள் தலைப்புச் செய்திகளாக வந்தன. ஆனால், இன்று வெற்றிக்கதைகள் குறித்து பேசப்படுகிறது. முன்னதாக, பலவீனமான 5 பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது.

ஆனால், தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. வரும் ஆண்டுகளில், உலகின் முதல் மூன்று பொருளாதார நாடாக இந்தியா மாறும். உங்கள் வாக்கு பலத்தை வைத்து ‘பரிவாரவாதி’ கட்சிகளை தோற்கடிக்க வேண்டும். உங்களின் கனவே எனது லட்சியம். இதுவே மோடியின் வாக்குறுதி என்று தெரிவித்தார். இளம் தலைமுறை பிரதமர் மோடி உரையாற்றியதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் என்பதே தெரியவருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்