எங்கள் கடல் எல்லைகளை பாதுகாப்பதில் உங்களின் அர்ப்பணிப்பு மிகப்பெரியது – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!
இன்று கடற்படை தினத்தை முன்னிட்டு எங்களது கடல் எல்லைகள் மற்றும் வர்த்தக பாதைகளை பாதுகாப்பதில் உங்களது அர்ப்பணிப்பு குறித்து தேசம் பெருமிதம் கொள்கிறது என ஜனாதிபதி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காராச்சி துறை முகத்தின் மீது 1971-ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் போர் நடந்த பொழுது நடைபெற்ற தாக்குதலை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லையில் இருந்து நாட்டை பாதுகாக்க கூடிய கடற்படை வீரர்களுக்கு பல்வேறு தலைவர்களும் அரசியல்வாதிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அது போல ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கடற்படை தினமாகிய இன்று எங்களது கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்துக்கு எனது வாழ்த்துக்கள். எங்கள் கடல் எல்லைகளை பாதுகாப்பதிலும் வார்த்தைக எல்லைகளை பாதுகாப்பதிலும், அவசர காலங்களில் தேவையான உதவிகளை வழங்குவதிலும் உங்களது அர்ப்பணிப்பு குறித்து தேசம் மிகவும் பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
On Navy Day, my greetings to our Navy personnel, veterans and their families.
Nation is proud of your commitment in protecting our maritime frontiers, securing our trade routes, and providing assistance in times of civil emergencies.
May you ever rule the waters.
Jai Hind! ????????— President of India (@rashtrapatibhvn) December 4, 2020