அரிசி இல்லாத காரணத்தால் ராஜநாகத்தை வேட்டையாடி சாப்பிட்ட இளைஞர்கள்.!

Default Image

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால், ராஜ நாகத்தை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். அவர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி வேலைபார்ப்பவர்கள், கட்டட தொழிலாளர்கள் என பலர் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே தவித்து வருகின்றனர்.

பாம்புகள் அதிகம் இருக்கும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 3 இளைஞர்கள் சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால், ராஜ நாகத்தை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய புகைப்படங்களை வைத்து மூன்று இளைஞர்களை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், ராஜநாகமானது பாதுகாக்கப்பட ஊர்வன பட்டியலில் இருப்பதால், அந்த 3 இளைஞர்களுக்கு ஜாமீன் கிடைகாது எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்