மது போதையில் மியூசிக் ஃபெஸ்டிவலில் நடன மாடிய இளைஞர்கள்!பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Default Image
  • கோவாவில் நடைபெற்று வரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலில்  இரண்டு இளைஞர்கள் கீழே விழுந்து இறந்துள்ளனர்.
  • இதன் காரணமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

வடக்கு கோவா மாவட்டத்தின் வாகடோர் கடற்கரை கிராமத்தில் ஆண்டுதோறும் EDM திருவிழா நடைபெற்று வரும்.அதே போல் இந்த வருடம் நடைபெற்று வரும் சன்பர்ன் எலக்ட்ரானிக் டான்ஸ் மியூசிக் ஃபெஸ்டிவலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர்.

பின்னர் அந்த ஃபெஸ்டிவலில் போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உபயோகித்ததால், நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென அந்த இடத்தில் சரிந்து விழுந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மாபூசா நகரின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் வரும்வழியிலே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மேலும் அந்த இளைஞர்கள் ஆந்திராவை சேர்ந்த சாய் பிரசாத் மற்றும் வெங்கட் என தெரியவந்துள்ளது.இதன் காரணமாக காவல்துறை உயர் அதிகாரி உத்கிரிஷ் பிரசூன் இந்த சம்பவம் மாலை 3 மணியளவில் நிகழ்ந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் இவர்களின் மரணம் மாரடைப்பு அல்லது போதைப்பொருள் அளவு அதிகமாக பயன்படுத்தியதன் விளைவு என எதுவாகவும் இருக்கலாம் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை எங்களால் எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் திருவிழாவின் இணை அமைப்பாளர்களில் ஒருவரான ஷைலேஷ் ஷெட்டி என்பவர் இந்த சம்பவம் குறித்து தனக்கு தெரியாது நடந்த நிகழ்வை கண்டு மிகவும் வருந்துவதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்