ஆலிவ் ரிட்லி ஆமைகளை காப்பாற்ற தினமும் 6 இளைஞர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவில் உள்ள அஸ்டரங்கா கடற்கரையை முன்பெல்லாம் பார்க்கையில் அழகாக இருக்கும். ஆனால், தற்போது குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், மருத்துவ கழிவுகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தென்பட்டது .இந்த பகுதிகளில் தான் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கூடுக்கட்டும்.
எனவே அவைகளை பாதுகாக்கும் பொருட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் வனவிலங்கு பாதுகாப்பு நிபுணரான பிச்சிட்ரானந்த பிஸ்வால் அவர்களின் வழிகாட்டலின் படி சந்தோஷ் பெஹெரா, சுமன் பிரதான், சூசந்த் பரிதா, பிரபாகர் பிஸ்வால் மற்றும் தில்லிப் குமார் பிஸ்வால் என்ற 6 இளைஞர்கள் தினமும் 8 மணி நேரம் ஒதுக்கி கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்த ஒரு மாத காலத்தில் இவர்கள் கடற்கரையின் 18கி.மீ முழுவதும் 5000 கிலோ கழிவுகளை அகற்றியுள்ளனர். இந்த செயலுக்கு இந்த 6 இளைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது .
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…