இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் குறளை படிக்க வேண்டும்! பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இன்று திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், திருவள்ளுவரை புகழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன. அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025