அக்கா, தங்கை இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்…! காரணம் என்ன….?
அக்கா, தங்கை இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் திருமணத்தை அப்படி ஒரு புனிதமான ஒரு நிகழ்வாக கருதுகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.
அந்தவகையில், கர்நாடகாவில் கோலாரில் உள்ள குருடுமலே கோவிலில் ஒரு திருமண நிகழ்வு நடைபெற்றது. மே 7-ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் குறித்து எல்லாரும் பேசும் வகையில் நடைபெற்று முடிந்தது. உமபதி என்ற இளைஞன் தனது உறவினரான லலிதாவை மட்டுமே திருமணம் செய்து கொள்வதாக கூறி இருந்தார். ஆனால், அவர் பேச்சு குறைபாடுள்ளவர்.
இந்நிலையில், திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், லலிதாவின் சகோதரியையும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டால்தான் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார. இதனையடுத்து இரு குடும்பத்தினரும் இந்த விஷயம் தொடர்பாக விவாதித்தனர். பின் இரு சகோதரிகளையும் அவர் திருமணம் செய்து கொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனைதொடர்ந்து, உமபதி ஒரே இடத்தில் சுப்ரியா மற்றும் லலிதா இருவரையும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், உமாபதியை காவல்துறையினர் கைது செய்தனர். ஏனெனில் அவர் திருமணம் முடித்த இரு பெண்களில் ஒருவர் மைனராவார்.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சுப்ரியாவின் தந்தை நாகராஜ் ராணியம்மா மட்டும் சுப்பம்மா என்ற உடன் பிறப்புகளையும் ஒரே இடத்தில் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ஒருவர் பேச்சு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.