திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை.!

Default Image
  • தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற மனவருத்தத்தில் இருந்த வாலிபர் தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
  • மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது.

இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா காவல் நிலைய எல்லை பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள இன்ஸ்பெக்டர் கே.சீனிவாஸ் ராவ், தற்கொலை செய்து கொண்டுள்ளவர் பெயர் முகமது ஷரஃப் என கூறினார். இவர் பாரூக் நகர் ஹரபாஹாட்டில் வசிக்கும் முகமது யூசுப் என்பவரின் மகனாவார். இவருக்கு 26 வயதான முகமது ஷரஃப் பவுன்சர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முகமது ஷரஃப் கடும் மனழுத்ததில் இருந்துள்ளார். பின்னர் சரியான வயதாகியும் தனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற மனவருத்தத்தில் அவர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அவரது அறைக்குள் சென்ற ஷரஃப் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனை அடுத்து அவரது அறைக்கதவை குடும்பத்தினர் தட்டியுள்ளனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவரது அறையிலுள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் காவல் அதிகாரி சீனிவாஸ் ராவ் கூறுகையில், கல்யாணம் ஆகவில்லை என்று சில காலமாக மன அழுத்தத்தில் இருந்த ஷரஃப் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டார்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது என தகவல் தெரிவித்துள்ளார். எனினும் வேறு ஏதேனும் காரணத்தால் ஷரஃப் தற்கொலை செய்து கொண்டாரா என பல தரப்பில் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்