39 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்பதால் இளைஞர் தற்கொலை!

ஹைதராபாத் மாநிலத்தில் 39 வயதாகியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை எனும் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக பணியாற்றி வந்துள்ளார். சாரி தான் வேலை பார்க்கக்கூடிய இடத்துக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சற்று மயக்கமுற்ற நிலையில் ஸ்ரீகாந்த் சாரி வீட்டிற்கு வந்துள்ளார். எனவே அவரது வீட்டின் உரிமையாளர் அவருக்கு உதவி வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் சென்றதும் தனது சகோதரிக்கு போன் செய்த சாரி, தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவரது சகோதரி உடனடியாக கிளம்பி ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சென்று பார்த்த பொழுது ஏற்கனவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை எடுத்து வீட்டின் உரிமையாளரை அழைத்த அவரது சகோதரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு தற்கொலைக்கான குறிப்பு எதுவும் கிடைக்காததால், அவரது சகோதரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு 39 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்ற விரக்தியில் அவர் உள்ளதாக தன்னிடம் கூறியதாக அவரது சகோதரி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த் சரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025