இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் ஹூட்டா மாவட்டத்திலுள்ள பங்கிடா கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ் ஆவார்.இவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது.
மேலும் இவர் அதே பகுதியில் உள்ள உயர் ஜாதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது காதலியை சந்திக்க விரும்பிய ரஞ்சன் தாஸ் பேசுவதற்காக சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும் கட்டியா பல்டாசிங் என்ற இரண்டு இளைஞர்கள் சௌமிய ரஞ்சன் தாஸை வழிமறித்துள்ளனர்.பின்னர் அவரை தென்னை மரத்தில் கட்டிவைத்து சித்தரவதை செய்துள்ளனர்.
மேலும் அந்த இளைஞர்கள் கேவலமான வார்த்தைகளை கூறியதோடு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.இதனை அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்தார்களே தவிர ரஞ்சன் தாஷுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.
பின்னர் சமூகவலைதளங்களில் வெளியான அந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.பின்னர் கட்டிவைத்து அடித்தத்தில் சோர்ந்து போன ரஞ்சன் தாஸ் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதனை கேட்ட அந்த இரண்டு இளைஞர்கள் அவரின் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் வீடியோவாக வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் காதல் விவகாரத்தில் ஜாதி வேறுபாடு காரணமாகவும் இவ்வாறு நடந்தது என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ரஞ்சன் தாஸை தாக்கிய இரண்டு இளைஞயரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…