காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை!வாயில் சிறுநீர் கழித்த இளைஞர்கள்!

Default Image
  • தனது ஜாதி பெண்ணை காதலித்த குற்றத்திற்காக வேறு ஜாதி இளைஞரை மரத்தில் கட்டி வைத்து வாயில் சிறுநீர் கழித்த இளைஞயர்கள்.
  • வளைத்து பிடித்து கைது செய்த காவல்துறையினர்.

இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் ஹூட்டா மாவட்டத்திலுள்ள பங்கிடா  கிராமத்தை சேர்ந்தவர் சௌமியா ரஞ்சன் தாஸ் ஆவார்.இவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் இவர் அதே பகுதியில் உள்ள உயர் ஜாதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது காதலியை சந்திக்க விரும்பிய ரஞ்சன் தாஸ் பேசுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது  அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும் கட்டியா பல்டாசிங் என்ற இரண்டு இளைஞர்கள் சௌமிய ரஞ்சன் தாஸை வழிமறித்துள்ளனர்.பின்னர் அவரை தென்னை மரத்தில் கட்டிவைத்து சித்தரவதை செய்துள்ளனர்.

மேலும் அந்த இளைஞர்கள் கேவலமான வார்த்தைகளை கூறியதோடு அடித்து துன்புறுத்தியுள்ளனர்.இதனை அங்கிருந்த மக்கள் வீடியோ எடுத்தார்களே தவிர ரஞ்சன் தாஷுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.

பின்னர் சமூகவலைதளங்களில் வெளியான அந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.பின்னர் கட்டிவைத்து அடித்தத்தில் சோர்ந்து போன ரஞ்சன் தாஸ் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதனை கேட்ட அந்த இரண்டு இளைஞர்கள் அவரின் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் வீடியோவாக வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் காதல் விவகாரத்தில் ஜாதி வேறுபாடு காரணமாகவும் இவ்வாறு நடந்தது என தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ரஞ்சன் தாஸை தாக்கிய இரண்டு இளைஞயரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain
Kerala CMO bomb threat