இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண்..!
ஆண் வேடத்தில் இருந்த இளம் பெண்ணை 7 வருடங்களாக இளம்பெண் ஒருவர் காதலித்து கல்யாணம் செய்த ருசிகர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
திருமணத்தன்று, முகூர்த்தம் முடிய சற்று நிமிடங்களுக்கு முன்பு, மணமகனான ஸ்ரீராம் மட்டும் கோவிலுக்கு வந்துள்ளார். தன் உறவினர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், அவர்கள் விரைவில் கோவிலுக்கு வருவார்கள் எனவும் ஸ்ரீராம் கூறியுள்ளார். நேரம் கழிந்ததால், பெண் வீட்டார் மத்தியில் இளம்பெண் கழுத்தில் தாலியை கட்டி கல்யாணமும் செய்துகொண்டார் ஸ்ரீராம்.
இதையடுத்து, பெண் வீட்டார் இளம்பெண்ணை நகை, வரதட்சனைகளுடன் ஸ்ரீராம் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இரவு சாந்தி முகூர்த்தம் நடத்தவும் தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், ‘உன்னை காதலிக்கும் ஸ்ரீராம் ஆண் அல்ல; அவர் ஒரு பெண்’ என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை சொன்னார். இதனையடுத்து இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது.
ஸ்ரீராம் என்ற பெயரில் காதலனாக வலம் வந்தவரையும், அவரை காதலித்த இளம்பெண்ணையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.
இந்த விசாரணையை அடுத்து கைதுசெய்யப்பட்ட பெண்னான ஸ்ரீராம் கூறுகையில், ‘எனக்கு கடன் அதிகமாக இருப்பதால் அதனை அடைக்க வேறு வழி தெரியவில்லை. அதனால் ஆண் போல நடித்து ஒரு பெண்ணை திருமணம் செய்தால், அந்த பெண் வரதட்சணையாக கொண்டு வரும் நகையை ஏமாற்றி வாங்கி விற்று கடனை அடைக்க முடிவு செய்தேன்.
அதற்காக ஸ்ரீராம் என்ற பெயருடன் 7 ஆண்டாக அந்த பெண்ணை காதலிப்பது போல் நடித்து வந்தேன். நான் எதிர்பார்த்தது போன்று திருமணமும் எங்கள் இருவருக்குள் நடந்தது.