பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட பெண் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில்,அகில இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.இந்த பேரணியில் திடீரென பெண் ஒருவர் ஏறி மைக்கில் ,” பாகிஸ்தான் ஜிந்தாபாத்”(பாகிஸ்தான் வெல்க ) என்று முழக்கமிட்டார்.அந்த சமயத்தில் மேடையில் இருந்த ஓவைசி மேடையில் இருந்த அந்த பெண்ணிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சி செய்தார்.இதன் பின்னர் காவல்த்துறையினர் மேடையேறி அந்த பெண்ணை மேடையிலிருந்து கீழே இறக்கினார்கள். இதன் பின் இது குறித்து ஒவைசி கூறுகையில்,பெண்ணுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எதிரி நாடான பாகிஸ்தானை எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய ஒட்டுமொத்த பயணமே இந்தியாவைப் பாதுகாப்பதுதான் என்று கூறினார்.
இதன் பின்னர் அந்த பெண்ணை காவல்த்துறையினர் தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.அந்த பெண் மீது 124A, 153A மற்றும் 153B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…