நடனமாடி கொண்டு போக்குவரத்தை சரி செய்யும் இளம் பெண்..!!
புனேவில் கல்லூரியில் படித்து வரும் சுபி ஜெயின்.இவருக்கு வயது 23 மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் நடனம் ஆடிக்கொண்டு போக்குவரத்தை சீரமைத்து வருகிறார். போக்குவரத்தை சரி செய்வதோடு போக்குவரத்து விதிகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறிகிறார். மேலும் சிக்னலில் நிற்கும் இருசக்கரவாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் என்று உணர்த்துகிறார்.
மேலும் கார் ஓட்டுபவர்களை வலி மறித்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டு ஓட்டுமாறு கூறுகிறார். போக்குவரத்து விதிகளை மீறுவோர் போக்குவரத்து விதிகளை கற்றுக் கொள்ள வேண்டும். இதை போல ஏற்க்கனவே சில தினங்களுக்கு முன்னர் ரஞ்சித் சிங்
என்ற போக்குவரத்து காவலர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆடி போக்குவரத்தை சரிசெய்துள்ளார்.