நீங்கள் ஆணுறைகள் கூட கேட்பீர்கள்..! மாணவிகளிடம் முகம் சுளிக்கும் வண்ணம் பேசிய ஐஏஎஸ் பெண் அதிகாரி…!
ஆணுறைகள் கூட அரசாங்கம் தரும் என்று எதிர்பார்ப்பீர்கள் என ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜுத் கவுர் பம்ப்ராவின் பேச்சு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கு ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக தலைவரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஜுத் கவுர் பம்ப்ரா கலந்து கொண்டார்.
இந்த கருத்தரங்கில் அவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார் அப்போது மாணவி ஒருவர் அவரிடம், மலிவான விலையில் ரூ.20-30-க்கு சானிட்டரி நாப்கின்களை அரசால் வழங்க முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு அங்கிருந்த மாணவிகள் கரவோசை எழுப்பினர்.
மாணவியின் கேள்விக்கு பதிலளித்த பம்பரா, நீங்கள் நாளைக்கே ஜீன்ஸ் பேண்ட் கேட்பீர்கள், அழகான ஷூக்கள் எங்களுக்கு தரக்கூடாதா என்று கேட்பீர்கள். கடைசியில் ஆணுறைகள் கூட அரசாங்கம் தரும் என்று எதிர்பார்ப்பீர்கள் என்று அநாகரிகமாக பதில் தெரிவித்தார். மலிவான நிலையில் சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியிடம் ஒரு ஐஏஎஸ் பெண் அதிகாரி பிறர் முகம் சுளிக்கும் வண்ணம் பேசி இருப்பது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.