உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. உத்தரபிரதேச காவல்துறையின் வாட்ஸ்அப் அவசர டயல் எண் ‘112’ இல், ‘இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன’ என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையத்தில், தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அச்சுறுத்தல் பெறப்பட்ட எண்ணைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய காவல்துறையினர் தனி கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ‘தனிநபரைக் கைது செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 29 மாலை இந்த அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உ.பி. முதல்வருக்கு மரண அச்சுறுத்தல் வருவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆதித்யநாத்தை அச்சுறுத்தும் அழைப்புகள் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தரபிரதேச முதலமைச்சருக்கு 2017 ஆம் ஆண்டில் ‘Z+’ வி.வி.ஐ.பி ஆயுத பாதுகாப்பு வழங்கப்பட்டது. 25-28 ஆயுதமேந்திய கமாண்டோக்கள் எங்கு சென்றாலும் அவரைப் பின்தொடர்ந்து செல்வர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர், ‘முதலமைச்சரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அவர் நாடு முழுவதும் எங்கு சென்றாலும், சிஐஎஸ்எஃப் கமாண்டோக்களின் வலுவான குழுவால் பாதுகாக்கப்படுவார். இதேபோன்ற கமாண்டோ குழுவினர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நிறுத்தப்படுவார்கள்.’ என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…