PAYTM செயல்பாடுகளை பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு முழுமையாக நிறுத்த RBI உத்தரவு

பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு PAYTM பேமெண்ட் வங்கி தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்த ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் Paytmக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. Paytm தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தததன் காரணமாகவே அதன் செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

பண பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழியாக செலுத்த உதவும் பிரபல நிறுவனமாக திகழ்கிறது Paytm. இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் கே.ஒய்.சி. என்ற விதிமுறைக்கு Paytm நிறுவனம் இணங்கவில்லை என்பதால் அந்த நிறுவனத்துக்கு, ரிசர்வ் வங்கி கடந்தாண்டு அக்டோபரில் ரூ.5.4 கோடி அபராதம் விதித்தது.

ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளின் அடிப்படையில் இந்த அபராதமானது விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த நிலையில், இனி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கக் கூடாது என்றும், டெபாசிட் மற்றும் டாப் அப் பணம் பெறுவதோ கூடாது என்றும் Paytm நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி!

வாடிக்கையாளர்களிடம் வாலட்களில் பணம் பெறுவதோ, என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ, வாடிக்கையாளர் சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, ஃபாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர வேறு எந்த வகையான வங்கி செயல்பாடுகளிலும் Paytm-ஈடுபடக் கூடாது. வாலட்களில் ஏற்கனவே உள்ள தொகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த தடையில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்